நான்காவது குடிநீர் திட்டம் பூமி பூஜை -பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புதூர் நடராஜன் தொடங்கி வைத்தார்


 

குடிநீர் திட்டத்திற்கான 16 கிராமங்களுக்கு புதிய மேல்நிலை தொடடி கட்டம் பணிக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன் தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம்-அவிநாசி 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.99.24 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்லடம் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் ஊராட்சிஒன்றியம் முதலில்பாளையத்தில் ஊராட்சியில் உள்ள 16 குக்கிராமங்களுக்கான மேல்நிலை தொட்டி கட்டும் பணியினை எம் எல் ஏ கரைப்புதூர் ஏ நடராஜன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் மார்க்கெட்டிங் சொசைடி தலைவர் சித்துராஜ், முதலிபாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வேலுசாமி,  கிளை கழக துணைச் செயலாளர் நடராஜன்,  என் எஸ் கே நகர் சரவணன், ஊராட்சி மன்ற செயலாளர் ராஜசேகர், பணி ஒப்பந்ததாரர் அவிநாசி வேலுமணி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.