கல்லூர் கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திட்டக்குடி அடுத்த கல்லூரியில் உள்ள கன்னியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கல்லூர் சாலையில் உள்ள பிற சக்தி பெற்ற கன்னியம்மன் கோவில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 22ம் ஆண்டாக தீமிதி விழா கடந்த 9ஆம் தேதி கொடி ஏற்றுதல் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10ம் தேதி சக்தி அழைத்தல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அன்றிரவு சாமி கல்லூர், பாசார் முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலாவும் நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை தீமிதி விழா நடைபெற்றது . அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.  கோவில் நிர்வாகி ஆறுமுகசாமி செந்தூர் குரூப் அறக்கட்டளை ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் பக்தர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.