வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சியுடன் கலைக்கட்டிய சுதந்திர தின விழா 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வகுமார் தலைமையில் கொடியேற்றி துவக்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் பேசுகையில் மாணவச் செல்வங்களுக்கு நமது பள்ளியின் சார்பில் பல்வேறு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் பெற்று தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். பிறகு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதில் கொடி கலரில் ஆடை அணிந்து விவசாயி பாடல்கள் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் வேடமணிந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பின்பு ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவில் உதவி தலைமையாசிரியர் திருநாவுக்கரசர் ஆசிரியர்கள் ஞானப்பிரகாசம், தேவநாதன் ,உதயகுமார், சேகர், ராமகிருஷ்ணன், மாயவன், உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், ரவிக்குமார் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடினார்கள். இதேபோல் பள்ளியின் அருகே உள்ள வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடினர்.