சீர்காழியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி



சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் ஜி.ஆர்.பி நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து சி.ஜெ.ஜார்ஜ் ரான்சன் பிரனேஷ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி சீர்காழி எல்.எம்.சி பள்ளி ஹெல்லிங்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியை துவக்கி வைத்தார். இதில் சென்னை  மதுரை சேலம் திருச்சி கோயம்புத்தூர் நாகை சீர்காழி அறந்தாங்கி பெங்களுர் பகுதிகளிலிருந்து 34 அணிகள் பங்கேற்று விளையாடினார்கள். நான்கு நாள்கள் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார்ஸ், பெங்களுர் ஆர்.மி போலீஸ் அணியும் மோதினர் இதில் 57க்கு 58 என்ற புள்ளி கணக்கில் கூடுதலாக ஒரு புள்ளியை பெற்று அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று முதல் பரிசு தொகை ரூ15,001 பெற்றது. அடுத்து இரண்டாம் இடம் பரிசு பெற்ற பெங்களுர் ஆர்மி போலீஸ் அணி ரூ12,001 மூன்றாமிடம் பெற்ற சென்னை முருகராஜ் பிடிசி அணிக்கு ரூ.10,001 4-ஆம் இடம் பெற்ற சேலம் சாய் அணிக்கு 3,001 பரிசாக வழங்கப்பட்டது.



 


சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் எம்.பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு விவேகானந்தா கல்வி குழும தாளாளர் கே.வி.இராதாகிருஷ்ணன் பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் எல்.எம்.சி மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பி.ஏ.ராஜசேகர் ரோட்டரி சங்கம் இளைஞர் நலம் பயிற்றுநர் பாபுநேசன் ரோட்டரி சங்க பொருளாளர் சி.சேகர் ஜி.ஆர்.பி கூடைப் பந்து கழக தலைவர் காந்தி நாதன் செயலாளர் ஆர்.டி.ராஜீ ரோட்டரி சங்க விளையாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் மற்றும் ஓய்.சி.சி விiயாட்டு கழக செயலாளர் எஸ்.பி கலியபெருமாள் ரோட்டரி கோசேர்மன் டி.சிவகுரு கல்லூரி முதல்வர் தம்மையா பிரபுதாஸ் குட் சமாரிட்டன் பள்ளி தாளாளர் பிரவீன் கபிலன் கணேஷ் ரப்பு ரமேஷ் சீர்காழி தி.மு.க நகர கழக செயலாளர் சுப்பராயன் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.ரமேஷ் நன்றியுரையாற்றினார். விளையாட்டு அணியினர் தங்க இடவசதி அளித்த ராஜேஸ்வரி திருமண மண்டப உரிமையாளர் பாலசுப்பரமணியன் மின்விளக்கு வசதி செய்த ஏ.வி.மணி ஸ்கோர் போர்டு பணி செய்த ஹரிஷ் ஆகாஷ் ஆதிராஜ் கார்த்திகேயன் மற்றும் வாஞ்சிநாதன் பாலாஜி தினேஷ் லக்கி மற்றும் அனைவருக்கும் நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது


Previous Post Next Post