பல்லாவரத்தில் குறைந்த விலையில் குர்பானி ஆடுகள் விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி 

வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள பரபல யா மொய்தின் பிரியாணி ஹோட்டல் நிருவனம் ஆடுகளை விற்பனை செய்து வருகின்றது. மற்ற இடங்களில் உள்ள விலையை விட இங்கு மிகவும் குறைவாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். யா மொய்தின் நிருவனத்தினர் கடந்த பத்து வருடங்களாக ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். முதலில் சிறிய அளவில்  ஆடுகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம் இன்று சென்னை முழுவதும் விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு விலை குறைவாக  கொடுப்பதை சேவையாக கருதுவதாக யா மொய்தின் ஹோட்டல் நிருவனர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.