கருவேலம்பூக்கள் திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார் கோபி சுகனேஸ்வரன் 








ஒரு தனிநபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானால் அவர் தம் குடும்பம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ,அந்த நபர் வசிக்கும் ஊரை பாதிப்புக்குள்ளாகி, அந்த ஊரும் ,அந்த நபரும் எப்படி அழிந்தனர் என்பதை, மதுரை அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, குடிப்பழக்கம் கூடாது என்பதை மையக் கருத்தாக கொண்டு ,ஒரு சமூக விழிப்புணர்வு ஊட்டும் திரைப்படம் தான் கருவேலம் பூக்கள்.

தனக்கு மட்டு மல்லாமல் தன் குடும்பத்திற்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் குடிப் பழக்கம் வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி .ஏ. ஜவகர் தாசன் ,இணை தயாரிப்பு டி .முனியன், கதை, திரைக்கதை, வசனம் ,இயக்கம் டி .ஏ. வினோபா, கேமரா டி. மகிபாலன் ,மற்றும் நேமம் வி. சிவானந்தன், எடிட்டிங் ஆர்.டி. அண்ணாதுரை, சண்டைப்பயிற்சி தவசி ராஜ் ,இசை சரண் பிரகாஷ் ,பாடல்கள் புலவர் சா.அன்பழகன் கானா பாலா மற்றும் அமிர்தா ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர். மேலும் இப்படத்தின் கோபிசெட்டிபாளையம் தங்கமலை கரடு பகுதியை சார்ந்த சுகனேஸ்வரன் பின்னணி பாடகராக அறிமுகமாகி உள்ளார். அவர் பாடியுள்ள  உசுரே உசுரே  என்ற பாடல் கதையம்சத்தோடு ஒன்றிய பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

 

 

 



 



 















ReplyForward







Previous Post Next Post