இந்த முறை இனிப்பு, அடுத்த முறை அபராதம்:  ஹெல்மெட் அணியாதவர்களுக்கு திருப்பூர் போலீசார் அறிவுரை 


 

திருப்பூரில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போலீசார், அடுத்த முறை ஹெல்மெட் அணியாமல் வந்தால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுரை கூறி அனுப்பினார்கள் .


வீடியோ இணைப்பு :  https://www.youtube.com/watch?v=vdQH6vljqLw&feature=youtu.be

 

திருப்பூர் காந்தி நகர், லட்சுமி நகர்,  ஆகிய ரோட்டரி சங்கங்கள், ரேவதி நர்சிங் காலேஜ், மங்களம்  ரோட்டராக்ட் சங்கங்கள், திருப்பூர் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். திருப்பூர் புஷ்பா தியேட்டர் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரபாண்டியன், ராஜாங்கம் ஆகியோர் போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரங்கள் வழங்கினார். மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். அப்போது, ' இந்த முறை ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு இனிப்பு கொடுக்கிறோம். அடுத்த முறை ஹெல்மெட் அணிந்து தான் வாகனம் ஓட்ட வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினார்கள் . இந்த நிகழ்ச்சியில் எஸ்.கே. பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி நிர்வாகிகள், ரோட்டராக்ட் நிர்வாகிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.