தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் சதுரங்கப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. சதுரங்கப் போட்டிகளை  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.


இதனில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 8ம் வகுப்பை சேர்ந்த மாணவர் சபரி   முதலிடத்தையும்,  அஜய் பிரகாஷ்   இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 8 ம் வகுப்பு மாணவி கிருத்திகா    முதல் இடத்தையும் , ஆறாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி    இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 4ம் வகுப்பை சேர்ந்த மாணவர் முத்தய்யன்    முதலிடத்தையும், பாலமுருகன்   இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 5 வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ  முதல் இடத்தையும் , ஜெயஸ்ரீ   இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.