ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் அவதி
 

கடலூர் மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீராமன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 45 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பள்ளிக்கு குடிநீர் வசதி எதுவும் இல்லாததால் மேலும் பள்ளியின் மேல்தளம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் சாதாரணமாக பெய்கின்ற மழைநீர் உள்ளே கசிவதால் மாணவ-மாணவிகள் உட்கார்ந்து கல்வி பயில்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது.

 

மேலும் தொடக்கப்பள்ளி என்பதால் சின்னஞ்சிறு குழந்தைகள் கல்வி பயில்வதால் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.  பள்ளிக்கு கழிப்பறை வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே இது சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.