ஆவின் பால் முகவர் சங்கம் சார்பாக கோரிக்கை மனு


 


இன்று வேலூர் மாவட்ட ஆவின் பால் முகவர்கள் சார்பாக சத்துவாச்சாரியில் ஆவின் பொது மேலாளரை சந்தித்து ஆவின் பால் முகவர் சங்கம் சார்பாக 50 க்கும் மேற்பட்ட முகவர்கள் ஒன்று சேர்ந்து  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.ஆவின் பொது மேலாளர் அனைத்து முகவர்களையும் உட்கார வைத்து கோரிக்கை அனைத்தும்  கேட்டது மட்டுமில்லாமல்  அனைவருக்கும் தேனீர் வழங்கி எங்களுக்கு மரியாதை செலுத்தினார்.அதற்காக முதல் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மாவட்ட செயலாளர் சங்கர் முதல் கோரிக்கையாக கமிஷன் தொகையை 3.2 சதவிதத்தில் 10 சதவிதமாக உயர்த்த வேண்டியும் (மின் கட்டணம் கடை வாடகை பெட்ரோல் உயர்வு)சுட்டி காட்டி பேசினார்.இதற்க்கு பொது மேலாளர் நான் இந்த கோரிக்கை கூறித்து சென்னை அலுவலகத்திற்க்கு அனுப்பி வைக்கிறேன் என கூறினார்.இரண்டாவது கோரிக்கையாக மழை காலங்களில் முகவர்களுக்கு மழை கோர்ட்(போர்வை)வேண்டும் என கோரிக்கைக்கு உடனடியாக வரும் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைத்து தலைவரிடம் அனுமதி வாங்கி நிறைவேற்றி தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.மூன்றாவது கோரிக்கையான இந்த தொழிலையே நம்பி இருக்கும் முகவர்கள் திடிரென மரணமடைந்தால்(வேலூர் மாவட்ட ஆவின் சங்க முகவர் தலைவர் பெருமாள் மாரடைப்பால் காலமானார்)அவர்களுக்கு என்று காப்பிடு திட்டம் செயல் படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இது குறித்து அரசுக்கு தெரிவிப்பதாக பொது மேலாளர் வாக்குறுதி அளித்தார்.மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சங்கர் செந்தில் நாகராஜி மற்றும் 50 க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.இவண் C.A.கோட்டி EX MC ஆவின் பால் முகவர்           சேண்பாக்கம்.வேலூர்