டி.என்.பாளையம் ஒன்றியம் கணக்கம்பாளையம் கிராமத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்


 


தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் டி.என்.பாளையம் ஒன்றியம் கணக்கம்பாளையம் கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வேளாண்மை உதவி அலுவலர் சரோஜா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், மற்றும் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.