திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளியில் ஆசிரியர் தினவிழா திருப்பூர்  தி ஃப்ரண்ட்லைன் அகாடமி பள்ளியில் ஆசிரியர் தின விழா  கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி போட்டி விளையாட்டுகளிலும் கேளிக்கை விளையாட்டுகளிலும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்களாக ஒரு நாள் முழுவதும் பொறுப்பேற்று ஆசிரியர்களின் அன்றாடப் பணிகளைச் செய்தனர். பள்ளி முதல்வராக பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தேவநந்திதா,  துணை முதல்வர்களாக கார்த்திகா மற்றும் சுகன் செயல்பட்டனர். தலைமையாசிரியையாக பதினொறாம் வகுப்பு மாணவி கவிசிந்து செயல்பட்டார்.  ஆசிரியர்களுக்குச் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளை மாணவர்களே ஏற்பாடு செய்தனர்.  பள்ளியின் தாளாளர்  டாக்டர்.கே.சிவசாமி, பள்ளியின் செயலர் டாக்டர்.எஸ்.சிவகாமி, பள்ளியின் இயக்குநர்  சக்திநந்தன் - வைஷ்ணவி மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்