சென்னை புழுதிவாக்கம் புனித அன்னை தெரேசா ஆலய திருப்பலி மற்றும் தேர் பவனி
 

கிறிஸ்தவ சமயத்தில் பல்வேறு புனிதர்கள் இருந்தாலும் புனித அன்னை தெரேசா நாம் வாழும் காலத்திலேயே யாரும் செய்ய முடியாத அளவு பல்வேறு சேவைகள் செய்து நம் மத்தியில் புனிதராக வாழ்ந்து வந்தவர். சென்னை புழுதிவாக்கத்தில் புனித அன்னை தெரேசா ஆலயம் அமைந்துள்ளது. புனித அன்னை தெரசாவிற்கு திருவிழா கொண்டாடும் முதல் ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தின் நான்காம் ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்பணி லூயிஸ் ராயர் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனியுடன்  மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மிகவும் போற்றி வணங்கியவர் புனித அன்னை தெரசா என்பது குறிப்பிடத்தக்கது.