சத்யசாய் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் சத்யசாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில்.  சத்யசாய் கல்வி நிறுவனங்கள், தலை வாசல் அரிமா சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் சார்பில்  இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பள்ளியின் இயக்குனர் பெரியசாமி முகாமை தொடங்கி வைத்தார். தலைவாசல் அரிமா சங்க தலைவர் கோபி தலைமை தாங்கினார். செயலாளர் செங்கோட்டையன் வரவேற்றார்.அரிமா சங்க சேவை திட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழு கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு பின்  மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முகாமில் அரிமா சங்க மாவட்ட தலைவர் முத்தையா, மண்டல தலைவர் மாரிமுத்து, அரவிந்த் கண் மருத்துவமனை பிஆர்ஓ திருவேங்கடம், ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பொருளாளர் பூபதி நன்றி கூறினார்.