இருளில் மூழ்கி கிடக்கும் சுங்குவார்ச்ததிரம் பேரந்து நிறுத்தம் 

 

சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தம்அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த ஒரு வருடங்களாக எரியாததால் இரவுநேரங்களில் சுங்குவார்சத்திரம் பகுதி இருளில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ரூ 6லட்சம் மதிப்பீட்டில்கடந்த சில ஆண்டுகளாக முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப் பட்டது.  இந்த உயர்கோபுர மின்விளக்கை திருமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிப்பு செய்யாததால் கடந்த ஒரு வருடங்களாக இந்த உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதி இரவுநேரங்களில் இருளில் மூழ்கியுள்ளதால், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களும், அப்பகுதியை சேர்ந்த வியபாரிகளும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சுங்குவார்ச்ததிரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இத்தொழிற்சாலைகளுக்கு வரும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பஜார் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த ஒரு வருடங்களாக எரியாமல் உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும், பஜார் பகுதியில் கடைகள் வைத்துள்ள வியபாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என திருமங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்காமல் உள்ளனர். எனவே சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமமக்க்கள் கூடும் இடமான சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் எரியாமல் உள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்