ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெருந்திரல் முறையீடு


தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அளித்துவரும் நெருக்கடிகளை கண்டித்தும் முற்றாக கைவிடக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பாக பெருந்திரல் முறை இயக்கம் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணை தலைவர் சீதாபதி ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்கள். பணி மேற்பார்வையாளர் சங்கம் மாவட்ட தலைவர் செல்வம் கிராம ஊராட்சி செயலர் சங்கம் மாநில பிரச்சார செயலாளர் தங்கதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பெருந்திரல் முறையீட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சியில் சண்முக சிகாமணி, ராஜேந்திரன், ஆனந்தன், கோலங்கள் சீதாபதி, சந்தோஷ்குமார், விஜயகுமார், ராமானுஜம், செந்தில், வேல்முருகன், செல்ல பாலன், ரவிசந்திரன், செந்தில், சரவணன், சங்கர், சசிகலா,  பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆதவன் ஜான் பிரிட்டோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.