பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலை கல்லூரி மாணவர்கள் 


கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியில் சுமார் நான்காயிரம் மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இந்த நாள் இன்று அரசு இலவச பஸ் பாஸ் கொடுத்து சரியான நேரத்துக்கு பேருந்துகள் வராத காரணத்தினால் மாணவர் மாணவிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளார்கள்.இதனால் இன்று விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மாணவர்கள் அரசு பேருந்து சரியான நேரத்திற்கு வராத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் அவர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்து வந்த  விருதாச்சலம் காவல்துறையினர் விரைந்து சென்று மாணவ- மாணவிகளை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.