ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள், ஆன்மீக மடாதிபதிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்


 

திருப்பூர் பொல்லிக்காளிபாளையம் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள், ஆன்மீக மடாதிபதிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் 

 

திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில் வழி உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில் மகாலட்சுமி சுவாமிகள்- அன்னலட்சுமி தம்பதிகளின் மகன் கார்த்திக் செல்வதிற்கும்,  கோவை பீளமேட்டை சேர்ந்த தொழிலதிபர் விஜயகுமார்-சரவணகுமாரி தம்பதியினரின் மகள் ரோகிணி பிரியாவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அவர்களது திருமணம் ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் ஆன்மீக மடாதிபதிகள் மற்றும் மகாலட்சுமி  சுவாமிகள் ஆசியுடன் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு செட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை மணமக்களின் பெற்றோர்கள் வரவேற்றனர்  விழாவில் கோவை பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளார், சரவணம்பட்டி ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர்கள் ப.வெ.தாமோதரன், மு.பெ.சாமிநாதன், அண்ணா திமுக

எம்எல்ஏக்கள் கரைபுத்தூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார் ஊ.தனியரசு ஒய்வு பெற்ற நீதிபதி வத்தலகுண்டுஆறுமுகம், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், பிரதிநிதி ரஞ்ஜீத் ரத்தினம் மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் கேரளா,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஸ்ரீ மகாலட்சுமி கோவில் தர்ம சேவா அறக்கட்டளை, ஸ்ரீ லட்சுமி நாராயணன் பீட நிர்வாகிகள், ஆன்மீக பேரவை, மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மணமக்களின் இருவீட்டாரும் செய்திருந்தனர்  விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் ஆசி வழங்கினார்