மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ.பள்ளி மாணவர்களுக்கு  விளையாட்டு சீருடை வழங்கும் விழாநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ.பள்ளியில் பயிலும் மங்கைநல்லூர், கழனிவாசல் பகுதியை சேர்ந்த கபடி விளையாடும் மாணவர்களுக்கு மங்கைநல்லூர் கலைத்தாய் அறக்கட்டளை சார்பில் இலவசமாக விளையாட்டு சீருடை வழங்கும் விழா கே.எஸ்.ஓ.பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு கே.எஸ்.ஓ.பள்ளி தலைமையாசிரியர் இராமலிங்கம் தலைமை தாங்கினார். கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை சட்ட ஆலோசகரும், காவிரி அமைப்பின் துணை தலைவர் வழக்கறிஞர் சௌ.சிவச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தி பேசினார். நிறைவாக கே.எஸ்.ஓ. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிந்தனைச்செல்வன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள்;, கலைத்தாய் அறக்கட்டளை நிர்வாகிகள்; செய்திருந்தனர்.