திட்டக்குடி அடுத்த பனையாந்தூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பனையாண்ந்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ செல்வமுத்து ஸ்ரீ செல்வ முருகன் ஆலயம் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 

கடந்த 11/ 9 /2019 தேதி சக்தி அழைத்து சாமி வழிபாடு செய்து கணபதி ஹோமம் பூஜைகளும் 12/9/2019 ம்  தேதி  தர்ப்பை கயிற்றின் மூலம் சாமிக்கு உயிர் கொடுத்தல்13/9/2019 அம்மன் திருமஞ்சனம் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் மகாதீபாராதனை ஸ்ரீ விநாயகர் துதி ஸ்ரீ அம்மன் துதி ஸ்ரீ முருகன் துதி பாடி வழிபாடு செய்தனர். அதன் தொடர்ச்சியாக காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியம் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.