ரோட்டரி திருப்பூர் நிட்ஸ் சிட்டி, சோனி புளுமெட்டல்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் குடிமராமத்துப் பணிகள்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கொழுமங்குழி
ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரோட்டரி திருப்பூர் நிட்ஸ் சிட்டி, சோனி புளுமெட்டல்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் குடிமராமத்துப் பணியினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பிலும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள், கொடையாளர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இதற்கெல்லாம் சிறப்பு சேர்க்கும் வகையில் தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொழுமங்குழி கிராம ஊராட்சியில் அமைந்துள்ள சுமார் 9.00 ஏக்கர் பரப்பளவிலான ஆண்டிபாளையம் குளம் ரோட்டரி திருப்பூர் நிட்ஸ் சிட்டி, சோனி புளுமெட்டல்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் இக்குளத்தினை தூர்வாரி கரையினை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இக்குளத்தினை மேம்படுத்துவதன் மூலம் வருகின்ற மழை காலங்களில் நீரை சேமித்து இக்குளத்தினை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனவே, நாம் நல்ல முறையில் இப் பணியினை மேற்கொண்டு நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். இது போன்று சமூக பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
வரவேற்கின்றோம். நமது காலத்தில் நாம் அனைவரும் இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.


இந்நிகழ்வின் போது, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் ஊரக வளர்ச்சி
முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
அய்யாச்சாமி.கலைச்செல்வி, உதவி பொறியாளர் கிருஷ்ணமூத்தி , தாராபுரம்
வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் கார்த்திக்கேயன்,ரோட்டரி சங்க
நிர்வாகிகள் நாரயணசாமி, இளங்குமரன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post