தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா


ஆசிரியர்கள் தினமும் படிக்க வேண்டும் தமிழ் துறை தலைவர் வேண்டுகோள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்  தலைமை தாங்கினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் பழனி ரகுலதாசன் ஆசிரியர் தின உரை நிகழ்த்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அவர் பேசும்போது , ஆசிரியர்கள் அனைவரும் தினமும் படிக்க வேண்டும்.மாணவர்களின் கண்களை திறப்பவர்கள் ஆசிரியர்களே.பள்ளிகள்தான் கோவில்.ஆசிரியர்கள்தான் கடவுள்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் தினமும் நடந்ததை,உண்மையானதாக எழுத கற்று கொள்ளவேண்டும்.உங்களால் முடிந்த உதவியை மற்றவருக்கு செய்யுங்கள் என்று பேசினார். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் தமிழ்துறை தலைவர் பழனி ரகுலதாசன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.