1990 ல் சாமிநாதன் திருமணத்தை நடத்தினேன் இன்று அவர் மகன் திருமணத்தை நடத்துகிறேன்- முக. ஸ்டாலின்


 

திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் மகன் ஆதவன் - நேத்ரா திருமண விழா திருப்பூர் மணி மகாலில் நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் முக.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். 

முக. ஸ்டாலின் பேசுகையில், ' 1966 க்கு முன்பு சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்றால் கூட அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகவில்லை. அண்ணா அவர்கள் 1967 ல் இந்த திருமணங்களுக்கு ஆட்ட அங்கீகாரம் பெற்று தந்தார். 

சீர்திருத்த திருமணங்களை சட்ட வடிவாக்கி தந்தது திராவிட இயக்கங்கள். அப்படிப்பட்ட திருமணத்தில் நான் வாழ்த்த வந்திருக்கிறேன். சாமிநாதன் இந்த திருமணத்தை கழக திருமணமாக நடத்தி இருக்கிறார். ஒருவரையும் விடாமல் நன்றி சொன்னார்.  

1990 ல் சாமிநாதன் திருமணத்தை நடத்தினேன். அப்போது இருந்தது போலவே சாமிநாதன் இருக்கிறார். 

 

பாஜக. தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் பேசும்போது மனம் திறந்து பேசினார். அவர்களை வீழ்த்தி விட்டோம் என்றார். ஆனால் நாங்கள் வீழ்த்தவில்லை: தோற்கடித்து இருக்கிறோம். நாங்கள் தோற்கடிக்க வில்லை. மக்கள் தோற்கடித்து இருக்கிறார்கள்.

 

திருப்பூரில் இன்று தொழில் நிலைமை மோசமாகி உள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

 

ஆனால் முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருக்கிறார். அவர் மட்டும் இல்லை. அமைச்சர்களும் சென்று இருக்கிறார்கள். அதனால் தான் 

இது சுற்றுலா அமைச்சரவை என்று நான் சொன்னேன்

 

2800 கோடி முதலீட்டை பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. 220 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளதாக  முதல்வர் பேசி உள்ளார். எந்த நிறுவனம் இங்கு  துவங்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் போய் 2800 கோடி முதலீட்டை பெற்றதாக கூறுகிறார்கள். அது உண்மையாக இருந்தால் முதல்வருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

முதலீடு இங்கு வரவில்லை. எதற்காக அவர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள் என்றால், நாட்டில் உள்ள நிலைமையை மூடி மறைப்பதற்காக சென்று கொண்டு இருக்கிறார்கள். 

 

ஆகவே நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வெற்றியை போல மகத்தான வெற்றியை வரும் சட்டமன்ற தேர்தலிலும் நீங்கள் அளிக்க வேண்டும். என்றார்.