வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து மக்ரோனி சமைத்து சாப்பிட்டு விட்டு திருட்டு


 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் சமீப காலமாக வினோதமான முறையில் ஒரு கும்பல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அது போல் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பல் வீட்டில் உள்ள சமையலறையில் மக்ரோனி  சமைத்து சாப்பிட்டு விட்டு  அப்பகுதியில்  தொடர்ந்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


 

இச்சம்பவத்தை விசாரித்த காவல் துறையினர் நவீத், சிக்கந்தர், வசீன், நாசீர் பாஷா ஆகியோர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகள், 3 இருசக்கர வாகனங்கள்,

 


 

2 எல்.இ.டி டிவிக்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.