தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தாலுக்கா புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம் குப்பம் கிராமத்தில் தனி நபர் ஒருவர் அரசு இடத்தை வளைத்து வேலை அமைத்துக்கொண்டு ஆக்கிரமித்து உள்ளார் இது அக் கிராம பொதுமக்கள் அனைவரும் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். தனிநபர் 1995 ஆம் ஆண்டு பொது இடத்தில் அரசால் கட்டப்பட்ட உள்ள அங்கன்வாடி கட்டிடம் இடிந்த நிலையில் இருந்ததால் அந்த இடத்தை மாற்றி வேறு இடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அந்த அந்த இடம் தற்போது காலியாக இருந்தது அந்த இடத்தின் பின்புறம் உள்ள இடத்தில் கேசவன் மகன் பரசுராமன் என்பவர் அத்துமீறி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தற்போது இக் கிராமத்தில் நியாய விலை கடை இல்லை ஆகவே ஊரின் மையப் பகுதியாக உள்ள ஆக்கிரமிப்பு இடத்தில் நியாயவிலைக்கடை கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை எதிர்பார்த்துள்ளோம் அந்த நிதி கிடைத்தவுடன் அந்த இடத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்ட வேண்டும் எனவே தனிநபர் ஆக்கிரமித்து அந்த இடத்திலே மீட்டுத்தருமாறு கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.