டி.என். பி.எஸ். சி., போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்
 

வீடியோ இணைப்பு :- https://www.youtube.com/watch?v=KYy6u99qnWc&feature=youtu.be

 

திருப்பூர் காங்கயம் அருகில் உள்ள திட்டுப்பாறை சேரன் கலைக்கல்லூரியில் டி.என். பி.எஸ். சி., போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை  டி.என். பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் துவக்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

 

காங்கயம், திட்டுப்பாறையில் உள்ள சேரன் கலைக்கல்லூரியில் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. டி.என். பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் சேரன் கலைஅறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.தனசேகரன் வரவேற்று பேசினார். சேரன் மகளிர் கல்லூரி முதல்வர் எம்.எஸ்.தனராஜன் நன்றி கூறினார். இந்த விழாவில் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த டி.என். பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.நடராஜுடன் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துரையாடினர். அப்போது டி.என். பி.என்.சி., முன்னாள் தலைவர் ஆர்.நடராஜிடம் மாணவ மாணவிகள் கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.