சீர்காழியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா


சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திராவிடர் முன்னேற்றக் கழகம் திராவிடர் கழகம் அமைப்புகளின் சார்பில் தந்தை பெரியார் 141- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மண்டல தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சட்டநாதன் வரவேற்புரையாற்றினார். திராவிட முன்னேற்ற கழகத்தின் சீர்காழி நகர செயலாளர் சுப்புராயன் சீர்காழி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திராவிடர் கழக சீர்காழி நகர செயலாளர் சபாபதி சீர்காழி ஒன்றிய செயலாளர் செல்வம் தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி நகரதலைவர் மனோஜ், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் நந்தராஜேந்திரன் முன்னிலைவகித்தனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில பொறியாளர் அணி தலைவர் காழிகலைவாணன் முன்னாள்  ஒன்றிய செயலாளர் கமால் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மதியழகன், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட தலைவர் பரசுராமன், மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் திராவிட கழக மாவட்ட தலைவர் குணசேகரன், புலவர் கிருஷ்ணமூர்த்தி புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு பொறுப்பாளர் வெண்மணியழகன் கருத்துரை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகம் சம்மந்தம் நன்றி கூறினார்.