பழனி அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து-பேருந்து தீ வைத்து எரிப்பு


 

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=RfvZjBa3hKA&feature=youtu.be

 

பழனி அருகே தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து இருவர் பலி. ஒருவர் கவலைக்கிடம். பேருந்து தீ வைத்து எரிப்பு. பழனி அருகே சிந்தலவாடம் பட்டி என்ற ஊரில் வசித்து வருபவர் துர்க்கையப்பன் இவர் தனது தோட்டத்தில் வேலையை முடித்து விட்டு தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் தனது மாமியார் அங்காத்தாள் ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வரும் பொழுது திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அதி வேகமாக வந்த மயில் முருகன் என்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது இதில் துர்க்கையப்பன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


 

மேலும் அவரது மாமியார் அங்காத்தாள் உயிருக்கு போராடிய நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தை உறவினர்களும் ஊர் பொது மக்களும் ஒன்றாக இணைந்து பேருந்துக்கு தீ வைத்து கொளுத்தினர்.இதில் மளமளவென பேருந்து தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலாயினர். பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் முழுவதுமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் விரைந்து வந்து இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சோகத்துடன் காணப்படுகின்றனர். மேலும் பேருந்துக்கு தீ வைத்ததால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்படுகின்றன.