திருப்பூரில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு


திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் அவிநாசி வந்த கழக துணை பொது செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு, திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில்  கழக நிர்வாகிகள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்  முன்னிலை வகித்தனர். அப்போது முதல்வருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பூங்கொத்து மற்றும் பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்.