ஸ்ரீமுஷ்ணத்தில் உலகப்பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான பூவராக பெருமாள் கோயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த மாவட்ட கலெக்டர்கள்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அடுத்த வீராணம் ஏரியில் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட வந்த நிலையில் பின்பு கடலூர் மாவட்ட விவசாய ஆலோசனைக் குழு உறுப்பினர் பரமானந்தம் இல்ல திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். பின்பு மணமக்களுக்கு ஏர்கலப்பை நினைவு பரிசாக கடலூர் மாவட்டம் கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார்  இருவரும் வழங்கினார்கள். 


இதனை அடுத்து உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ வராக பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யும் பொழுது திருமண முகூர்த்த நாள் என்பதால் கோயிலில் சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் இருவரும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் இதனை கண்ட பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டனர்.