நாங்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம் - கமலஹாசன்


 

நாங்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம் ஆனால் இதுதான் மொழி என்று ஒன்றை மொழியை திணித்தால் அதனை எற்றுகொள்ள மாட்டோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.

 

சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகபட்டினம் செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறியது, 

 

கயவன் கமலஹாசன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், நாங்கள் தமிழை பற்றியும், தமிழர்களை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம் கயவன் சுப்பிரமணிய சாமியின் கருத்து தேவையற்றது அவரைப்பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் அதனை இப்போது பேசவில்லை என தெரிவித்தார். 

 

பொன் ராதாகிருஷ்ணன் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் கொண்டாட தெரியாதவர்கள் என்று கூறிய கருத்துக்கு அவர் மொழியை மாறி விட்டார் என நினைக்கிறேன் என கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர் , ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் அரசியல் கட்சிகள் கருத்து சொல்வதை விட இது குறித்து மாணவர்களிடம் கருத்துக் கேட்டால் கண்டிப்பாக பதில் கிடைத்து விடும்.  பாதியிலேயே படிப்பை நிறுத்துவதற்கு பொதுத்தேர்வு ஒரு காரணமாக இருக்கிறது என்றார். மேலும், படிப்பை பாதியிலே நிறுத்துவதற்கு எனக்கு பல காரணங்கள் இருந்தது இனிவரும் காலத்தில் உள்ள மாணவர்களுக்கு பதட்டமே ஒரு காரணமாக இருக்கும் பதட்டம் பயம் இனி பெற்றோர்களையும் தொற்றிக்கொள்ளும் என்பதுதான் உண்மை என தெரிவித்தார். 

 

இந்தி திணிப்பை பற்றி கேட்டதற்கு பதிலளித்த அவர், பொருளாதாரம் கீழ்நோக்கி பாய்ந்து கொண்டு இருக்கிறது அதனை மக்கள்  மறப்பதற்கு இது போன்ற பிரச்சினைகளை முன் வைக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாடு என்றுமே மொழியை போடுவதற்கும் தேவைப்பட்டால் அதுக்காக போராடுவதற்கும் தயாராக இருக்கிறது.

நாங்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம் ஆனால் இதுதான் மொழி என்று ஒன்றை மொழியை திணித்தால் அதனை எற்றுகொள்ள மாட்டோம். இந்தி போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பள்ளி மாணவன் நான் என கூறினார். 

 

தமிழக முதலமைச்சர் முதலீட்டாளர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் முதலில் அவர் சென்று வந்த

ஊர் பெயரை உச்சரிப்பதை கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஏனென்றால் முதல்வருக்கு அது கூட தெரியவில்லை என்று அண்டை மாநிலங்கள் கிண்டலடித்து விடக்கூடாது என்று தெரிவித்தார்.