ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநில உரிமையைபறிக்கும் செயல் - தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேட்டி


ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநில உரிமையை பறிக்கும் செயல்  என்று கனிமொழி M.P. தூத்துக்குடியில் பேட்டியளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி விமான நிலையத்தில் பேட்டியளித்தார் அவர் கூறுகையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாட்டை ஒற்றை அடையாளத்திற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெரும் முயற்ச்சி எடுத்து வருகின்றது. ஒரு மொழி ஒரு மதம் என எல்லாவற்றையும் அவர்கள் நினைக்ககூடிய அடையாளத்திற்குள் கொண்டு வர பாடுபட்டு கொண்டு இருக்கின்றனர். அதன் இன்னொரு முகம்தான் நாடு முழுவதும் ஒரு ரேசன் கார்ட் திட்டம், இத் திட்டத்தை கொண்டு வருதன் மூலம் மாநிலங்களுக்கு இருக்க கூடிய உரிமைகளை பறித்து கொள்வதில் ஈடுபட்டு இருக்கின்றனர்,  இது நிச்சயமாக மாநில உரிமைகளில் தலையிடக் கூடியது. பொது விநியோக திட்டத்தை சில மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தி கொண்டு இருக்கின்றன, சில மாநிலங்கள் அந்த அளவிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தாத சூழலில் இத்திட்டம் பல குழப்பங்களை ஏற்படுத்தகூடும், இதனை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. திராவிட முன்னேற்ற கழகம் தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழின உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபட கூடிய இயக்கம் எனக் கூறினார். பேட்டியின் போது அவருடன் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் N.P. ஜெகன், மாநகர கழக செலாளர் ஆனந்தசேகரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Previous Post Next Post