மயிலாடுதுறையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிமயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதுகலை சமூக பணித்துறை, காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பு, மயிலாடுதுறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாயவரம் ஜேசிஸ் சங்கம் இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேரணி துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுவாமிநாதன் தலைமை வகித்து, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.இதில் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை தலைவர் சோபியா, பேராசிரியர்கள் சௌந்தரராஜன், மகேந்திரன், திவ்யா, இளநிலை உதவியாளர் சிவராமன், காவிரி கிராம மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் அகஸ்டின் விஜய், வழக்கறிஞர் சிவச்சந்திரன், சுந்தர், மயிலாடுதுறை கோட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாய்ராபானு, மாயவரம் ஜேசிஸ் சங்க தலைவர் பாலன் மற்றும் சேவை அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி தருமபுரம், மூங்கில் தோட்டம், முளபாக்கம், செருதியூர், கோடங்குடி, நல்லத்துக்குடி தொடங்கி நல்லத்துக்குடி போன்ற பகுதிகள் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இந்த பேரணியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தண்ணீரை சேகரிப்போம், வாழ்வாதாரத்தை காப்போம், மழை நீரை சேகரிப்போம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நம் சந்ததியை காப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கல்லூரி மாணவிகள் வழங்கினர். இதில் கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை மாணவிகள், அங்கன்வாடி உதவியாளர்கள், மற்றும் சேவை அமைப்புகளைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.