ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஏ எஸ் ராஜ் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ராஜாராமன் முன்னிலை வகித்தார்.  ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக சதாசிவம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் சீதாராமன்  ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கினார். குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சங்கர் கணேசமூர்த்தி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பரமசிவம் சாந்தி லெனின் ராஜா சுதர்சன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சந்திரபாபு நன்றி கூறினார்.