ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு - பல்லடம் எம்.எல்.ஏ.கரைப்புத்தூர் நடராஜன் திறந்துவைத்தார் 


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வது வார்டு ராஜ கணபதி நகரில் ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் திறந்து வைத்தார். அத்துடன் மருத்துவ சிகிச்சைகளையும் துவக்கி வைத்தார். நிகழ்வின்போது மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன், உதவி பொறியாளர், திருநாவுக்கரசு, கவுரி சுந்தரம், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன, முன்னாள் ஊராட்சி தலைவர் சி.பி.வசந்தாமணி, முன்னாள் கவுன்சிலர் தர்மலிங்கம், கருப்புசாமி, ஆண்டனி, ஆறுமுகம், சிவசாமி , கவிக்குமார், ராமமூர்த்தி, கோகுலகிருஷ்ணன், சிவக்குமார், நாகஜோதி, கமால், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.