நம்பியூர் பஸ் நிலையம் அருகில் சாலை விரிவாக்கப் பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெறுகிறது


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் பஸ் நிலையம் அருகில் சாலை விரிவாக்கப் பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெறுகிறது, கடந்த சில ஆண்டுகளாக அதிக வாகன போக்குவரத்தால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளா வதை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் சேயூர்- சத்தியமங்கலம் சாலை, நம்பியூர் - புளியம்பட்டி சாலை அமைக்கும் பணி,மற்றும் பாலங்கள் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பணிகள் இரவு பகல் பாராமல் அதிவேகமாக நடைபெற்று வருகிறது சுமார் ஒரு கோடி மதிப்பிலான இப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் இரவு முழுவதும் நடைபெற்று வருவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.இந்த பணிக்கான ஒப்பந்தத்தை வி.பி.என். பில்டர்ஸ் சிறப்பாக செய்து வருகின்றனர்.