திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா


திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குமரன் ரோடு எம்.ஜி.ஆர் சிலை அருகில் அண்ணா படத்திற்கு மாலை அலங்கரிக்கப்பட்டு 1000 பேருக்கு லட்டு வழங்கப்பட்டது. விழாவிற்கு மாவட்ட பேரவை செயலாளர் சிட்டிசன் ஈஸ்வரன் தலைமை தாங்கி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் அம்மா தொழில் சங்க செயலாளர் சூர்யாசெந்தில், பேரவை ரத்தினசாமி, பகுதி கழக செயலாளர்கள் கருவம்பாளையம் துரைசாமி, பாலுசாமி, பங்க் ரமேஷ், ஜெகதீஸ், தம்பி தங்கவேல், கிளை கழக செயலாளர்கள் காஜா சபாபதி, சித்திக்,  மாரிமுத்து, வக்கீல்சுதாகர், சின்னையன், மாரிமுத்து, பெரியசாமி, சூரியபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.