ஈரோட்டில் வாசவி கல்லூரி மற்றும் அகர்வால் கண் ஆஸ்பத்திரி சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி


ஈரோட்டில் கண்தான விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது.  இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேசிய கண்தான விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ம் தேதியிலிருந்து செப்டம்பர் 8-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது, அதன்படி தேசிய கண்தான விழிப்புணர்வு நாளை ஒட்டி ஈரோட்டில் வாசவி கல்லூரி மற்றும் அகர்வால் கண் ஆஸ்பத்திரி சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய பேரணி நசியனூர் ரோடு வழியாக சென்று சம்பத் நகர் நூலகம் பகுதியில் முடிவடைந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கண்தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன், சந்திரமோகன் அரசு ஆஸ்பத்திரி மேலாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.