விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாலியல் தொந்தரவு  விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாலியல் தொந்தரவு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் விருத்தாசலம் மகளிர் காவல் ஆய்வாளர் கிருபா லட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு பற்றி விழிப்புணர்வு  மற்றும் கருத்துரை வழங்கினார்.

 

பின் மாணவிகள் அனைவரும் கல்வியை சிறப்பான முறையில் கற்க வேண்டும் என பேசினார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் கருத்துகள் வழங்கப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் அனைத்து மகளிர் உதவி ஆய்வாளர் கமினா பானு, காவலர் பழனியம்மாள்,  காவலர்கள்,  தலைமைஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாண மாணவிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.