தாராபுரம் வட்டத்தைச் சார்ந்த 1143 பயனாளிகளுக்கு ரூ.2.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

தாராபுரம் வட்டத்தைச் சார்ந்த 1143 பயனாளிகளுக்கு ரூ.2.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 552 பயனாளிகளுக்கு ரூ 1.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்
மறைந்தாலும் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவே எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார்கள்.மாண்புமிகு அம்மா அவர்களின் நல்வழியில் செயல்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும் பெண்கள் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட மாண்புமிகு அம்மா அவர்கள் பெண்களுக்கான
திட்டங்களை தாயுள்ளத்தோடு வாரி வழங்கி வந்தார்கள். குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினையும் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா ஆடுகள் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டமும் சிறப்புடன் செயல்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் கிராமப்புற பகுதிகளில் வழங்கப்பட்டு வந்த நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் விரைவில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமினை துவக்கி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து நமது மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் மாநகர நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து
பகுதிகளிலும் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளி உதவித்தொகை வீட்டுமனைப்பட்டா புதிய மின்னனு குடும்ப அட்டை குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தி சுமார் 30,591 விண்ணப்ப மனுக்களை பெற்றனர். அதனடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தங்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும்
பொதுமக்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன் பெற வேண்டுமென மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டத்தைச் சார்ந்த 1143 பயனாளிகளுக்கு 2,14,57,343
மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.


இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் உ.தனியரசு (காங்கயம்) வி.எஸ்.காளிமுத்து(தாராபுரம்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்காராஜ் தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை அட்சியர் விமல்ராஜ் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் தாராபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் குண்டடம் தாராபுரம் மற்றும் மூலனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.