ஆயக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக குளத்துக் கரையில் 2000 பணம் விதைகள் நடும் விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக குளத்துக் கரையில் 2000 பணம் விதைகள் நடும் விழா நடைபெற்றது..

 


 

பழனி அடுத்த ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் முருகானந்தம் இவர் இளம் வயது முதலே சமூக ஆர்வலராகவும் சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்யும் விதமாக பல்வேறு செயல்களை செய்து வருகிறார். இவர் ஆசிரியர் பணிக்கு வந்ததும் மாணவர்கள் மூலமாக சமுதாய தொண்டுகள் தொடர்ந்து செய்து வருகின்றார். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தை நினைவு கூறும் வகையில் பனைமரம் விழுந்தால் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற முன்னோர்களின் பழமொழிக்கேற்ப பனைமரத்தை அனைத்து பகுதிகளிலும் நட்டு வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பழைய ஆயக்குடியில் உள்ள பாப்பநாயக்கன் குளத்தினை சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் 2000 பனை விதை நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் தலைமையாக அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முருகானந்தம் முன்னிலையாக ஆயக்குடி அரசு பணியாளர்கள் மக்கள் நல அறக்கட்டளையின் தலைவர் லோகநாதன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர்களான குமரவேல், அண்ணாதுரை, தர்மர், மற்றும் மாணவர்களின் குழு தலைவர்களான சஞ்சய், சையது அபுதாகிர், பெரியசாமி, முத்துக்குமார், அஸ்வின், ஜெகன் குமார், உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு குளத்தை சுற்றியும் பனவிதைகளை நட்டனர்.

Previous Post Next Post