தெங்குமரஹாடா கிராமத்திற்கு சாலை வசதி வேண்டும் எனக்கோரி மாட்ட வனத்துறை அலுவகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் 

சத்தியமங்கலம்  அருகே உள்ள தெங்குமரஹாடா கிராமத்திற்கு சாலை வசதி வேண்டும் எனக்கோரி மாட்ட வனத்துறை அலுவகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் 



சத்தியமங்கலம்  அடுத்துள்ள பவானிசாகரில் இருந்து அடா்ந்த வனப்பகுதியில் முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையை கடந்து தான் தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்ல வேண்டும். தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்ல தினமும் இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த்து. இதில் தான்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளூக்கு பவானிசாகருக்கு வந்து செல்ல முடியும். 500 குடுப்பங்கள் வசிக்கும் தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்ல இந்த இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில். தற்போது சாலை மிகவும் மோசமடைந்ததால். பேருந்து அடிக்கடி பழூதாகி விடுகிறது என  காரணம் சொல்லி அரசு போக்குவரத்து கழகத்தினா். கடந்த நான்கு நாட்களாக பேருந்துகளை இயக்கவில்லை.


இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்தியமங்கலமத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டனா். சத்தியமங்கலம்- கோபி செல்லும் முக்கிய சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா் சாலைகளை செப்பனிட வனத்துறை முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்தும். உன்னடியாக பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழூப்பினார்கள் அப்போது போலீசாருக்கும். பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு எற்பட்டது. ஒரு மணி நேரமாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால் சத்தியமங்கலம்- கோபி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் உடனடியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தார் சாலை அமைக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில். ஒரு மணி நே்மாக நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Previous Post Next Post