குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளியில் 350 மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளியில் 350 மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவ முகாம்.

 


 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த இந்திரா நகரில் இயங்கி வரும்   முல்லை மழலியர் தனியார் பள்ளியில், இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. பல் மருத்துவ முகாமை வடகுத்து ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய பல் மருதுவர்கள் சங்கம் இணைந்து நடத்தியது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் பள்ளியில் பயிலும் 350 மாணவ மாணவிகளுக்கும் பல் சம்பந்தமான சிகிச்சை அளித்தும், ஆலோசனைகளையும் பல்  மருத்துவர்கள் வழங்கினர்.

 


 

பின்பு மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டூத் பேஸ்ட் மற்றும் லிக்யூட் வழங்கபட்டது.

மேலும் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கினர். இந்த முகாமில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் கடலூர் மையத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட பல் மருத்து குழுவினரும், வடக்குத்து ரோட்டரி சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.