தென்கொரியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு  வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தென்கொரியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு  வெற்றி பெற்று  சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு: 

 


 

தென் கொரியாவில் நடைபெற்ற மிஸ்டர் வெர்ல்ட் ஆணழகன் போட்டியில் 37 நாடுகளை சேர்ந்த 376 வீரர்கள் கலந்துக்கொண்டனர், இதில் இந்தியா சார்பாக 53 பேரும் அதிலும் தமிழகத்திலிருந்து தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக அரசு தலைமையில் 14 பேர் கலந்துக்கொண்டனர், இப்போட்டியில் 55கிலோ, 65கிலோ, 75 கிலோ, 85 கிலோ, 90 கிலோ, 100 கிலோ, 100கிலோக்கு மேல் என பல்வேறு பிரிவுகளின் கீழ்  5 பேர் வெள்ளி மற்றும் 3 வெங்கல பதக்கங்கள் என 8 பதக்கங்களை வென்றனர், உலக ஆணழகன் போட்டியில் கலந்துக்கொண்ட அனைவரும் இன்று சென்னை திரும்பினர் அப்போது வெற்றி பதக்கங்களுடன் வரும் வீர்ர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர் மலை அணிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர், வீரர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது தங்களுக்கு அரசு உதவிகள் மற்றும் ஸ்பான்சர் கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் மேலும் தீவிர பயிற்சி பெற்று சாதனை செய்வோம் என்றும் பாடிபில்டர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர்.

 

 

Previous Post Next Post