வெள்ள அபாய எச்சரிக்கை தண்டுரா மூலம் முன் அறிவிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை தண்டுரா மூலம் முன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்த காண மழையால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்  பவானிசாகர் அணையிலிருந்து 20000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கோபி செட்டி பாளையம் வட்டம் , வாணிப்புத்தூர் உள்வட்டம் , அடசப்பாளையம் கிராமம் , பெருமுகை, மஜரா  ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு (17.11.2019)  வெள்ள அபாய எச்சரிக்கையை தண்டுரா மூலம் முன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.