மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க சமூக ஆர்வலர்கள் சார்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கவுள்ளதையடுத்து தமிழக அரசு இடம் தேர்வுச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை நாகப்பட்டினத்திலேயே அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினத்தை விட மயிலாடுதுறை சிறந்த இடமாகவும் மையப்பகுதியாகவும் இருந்து வருவதால், மயிலாடுதுறையிலேயே மருத்துவக்கல்லூரியை அமைப்பது நல்லது என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி உள்ளது. ஆனால் மயிலாடுதுறையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் திருவாரூர் மருத்துவக்கல்லூரியும் இதே போல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியும் மயிலாடுதுறையிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் உள்ளது மேலும் காரைக்காலில் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி நாகைக்கு மிக அருகிலும் உள்ளது. ஆனால் மயிலாடுதுறையிலிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நாகப்பட்டினம் உட்கோட்டத்தை விட மயிலாடுதுறை உட்கோட்டம் 2 லட்சம் மக்கள் தொகையை கூடுதலாகக் கொண்டுள்ளது. மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பகுதி போதிய மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகிறது. இது குறித்து கொள்ளிடம் சமூக அர்வலர் காமராஜ் கூறுகையில் நாகப்பட்டினத்திற்கு மிக அருகே மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எனவே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எளிதில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு குறைந்த காலத்தில்சென்று சேர முடியும் ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்தும் அவசர கால போதிய மருத்துவ உதவிகளைப் பெற முடியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே ஒரு தலை பட்சமாக அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதை நிறுத்திவிட்டு