திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழிவுவுபடுத்தியவர்களை  கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழிவுவுபடுத்தியவர்களை  கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவரின் சிலையை இழிவுபடுத்தி வன்முறைகளை தூண்டியவர்களை கண்டித்தும், திருவள்ளுவரை வைத்து அரசியல் நடத்துவது கண்டித்தும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழிவுவுபடுத்தியவர்களை  கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சிவாஜிசிங் தலைமையில் நடைபெற்றது.  

 

இதில் வழக்கறிஞர்கள் அசோக்குமார், சரவணன், மணிகண்டராஜன், சங்கரய்யா, கருணாநிதி, ரங்கநாதன், குமரகுருசிவசங்கர் ,தனவேல் தீபன்சக்கரவர்த்தி, தன்ராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.