பழனியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாக நபிகள் நாயகம் உதய தின விழா

பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பாக நபிகள் நாயகம் உதய தின விழா நடைபெற்றது. பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் மற்றும் பழனி வட்டார ஜமாஅத் உலமா சபை இணைந்து நடத்திய உத்தம நபியின் உதய தின விழா சிறப்பு தொடர் பயான் மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்க செயலாளர் நாசர்தீன், ஜன்னத்துல் பள்ளிவாசல் சாதிக்குல் அமூன் நூரி தலைமை தங்கினார்கள். டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன துணைத்தலைவர் கைசர் வரவேற்புரை வழங்கினார். நிர்வாகசபை உறுப்பினர் பீர்முகமது,பிரேம்நசீர் முன்னிலை வகித்தார்கள். வட்டார ஜமாஅத் உலமா சபை செயலாளர் உபைதுர் ரகுமான்,தொகுப்புரை வழங்கினார். கீரனூர் இமாம் கமருதீன், அப்துல் ஹக்கீம், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பாலவாக்கம் இமாம் அபூபக்கர் உஸ்மானி, கலந்துகொண்டு நபியின் இறுதி தருணமும் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறி அதன் வரலாற்றை அழகாக விவரித்துள்ளார். நிகழ்ச்சியின் இறுதியாக இமாம் பள்ளிவாசல் அப்துல் கலாம் ஆசாத் நன்றியுரை கூறி விழாவினை நிறைவு செய்தார். பொதுமக்களுக்கு பொது விருந்து நடைபெற்றது. பொதுமக்கள் இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.