நெற்பயிர் மழைநீரில் மூழ்கினால் காப்பது எப்படி வேளாண் அதிகாரி விளக்கம்

நெற்பயிர் மழைநீரில் மூழ்கினால் காப்பது எப்படி வேளாண் அதிகாரி விளக்கம்


நெற்பயிர் மழை நீரில் மூழ்கினால் காக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். நாகை  மாவட்டம் கொள்ளிடம் வேளாண் இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாசனப் பகுதியில் தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பள்ளக்கால் பகுதியில் அல்லது வடிகால் வசதியில்லாத நிலங்களில் தண்ணீர் தேங்கி சம்பா தாளடி பருவத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற்பயிரை மூழ்காதவாறு தண்ணீரை வெளியேற்ற வேண்டும் இதனால் பயிரின் வேர்ப் பகுதியில் நல்ல காற்றோட்டம் உண்டாகும். இளம் நெற்பயிரானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது. அவ்வாறன சமயங்களில் அதே ரகம் மற்றும் அதே வயதுடைய நாற்றுகளை கரைந்து போன் இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். நெற்பயிர் தண்ணீர் தேங்கினால் நெற்பயிருக்கு பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களில் சுவாச இயக்கம் பாதிக்கப்படும் பிராணவாயு பயிருக்கு கிடைக்காமல் போவதால் அதனைச் சுற்றி நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் குறைந்து விடும் அல்லது நின்று விடும்  மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பம் அடைய அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்ளூம் வெள்ளநீர் வடிந்தவுடன் தாழம்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதாவது யூரியாவை ஏக்கருக்கு 25 கிலோவுடன் 20 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து வயலில் சீராக இட வேண்டும். நுண்ணூட்ட உரக்கலவையையும் மேலுரமாக தெளிக்க வேண்டும்.இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் புதிய இலைகள் துளிர்விட்டு பயிர் மீண்டும் செழீத்து வளரும் அல்லது மணிச்சத்தைச் டி.ஏ.பி உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்க வேண்டும் அதாவது  ஒரு ஏக்கருக்கு 4 கிலோ  டி..ஏ..பி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டஷ் உரத்தினை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இந்த முறையைப் பின்பற்றி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.