பாதிரி குப்பத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி முகாம்

பாதிரி குப்பத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

 


 

கடலூர் பாதிரி குப்பத்தில் தாய் மற்றும் சேய் பாதுகாப்பு சேவை சார்பாக மாதாந்தர குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மாத இரண்டாவது வார தடுப்பூசி போடும் பணி நேற்று கூத்தப்பாக்கம் அருள்மிகு பொன் விளைந்த களத்தூர் மாரியம்மன் வளாகத்தில் நடைபெற்றது.  இந்த முகாமிற்கு பாதிரிக்குப்பம் கிராம சுகாதார செவிலியர் ராஜப்பிரியா, மற்றும் அங்கன்வாடி பணியாளர் லட்சுமி ஆகியோர் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் பணிகளை செய்தனர். 

 

இம்முகாமில் ஒவ்வொரு வார புதன் கிழமைகளும் முதல் வாரம் பாதிகுப்பத்திலும் இரண்டாவது வாரம் கூத்தபாக்கத்திலும் மூன்றாவது வாரம் எம் புதூரிலும் நான்காவது வாரம் கரையேற விட்ட குப்பத்திலும் நடைபெற்று வருகிறது.  குழந்தைகளுக்கு 45, 75, 105-வது நாளில் ஓ பி வி சொட்டுமருந்தும், ரோட்டா சொட்டுமருந்தும், ஐபிவி, பென்டா தடுப்புசி  போடப்படுகிறது. 

 

ஒன்பதாவது மாத குழந்தைகளுக்கு எம் ஆர் ஜே தடுப்பூசியும் 16 மாத குழந்தைகளுக்கு ஒபிவி மருந்தும், எம் ஆர் ஜே தடுப்பூசியும், டி பி டி தடுப்பூசியும் ,ஐந்து வயது குழந்தைகளுக்கு இரண்டாவது பூஸ்டர் டி பி டி தடுப்பூசியும் 

 போடப்பட்டு வருகிறது.  கர்ப்பிணிபெண்களுக்கு டிடி தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் 34 குழந்தைகள் மற்றும் 7கர்ப்பிணி பெண்களுக்கு  சொட்டு மருந்து மற்றும்தடுப்பூசி போடப்பட்டது.

Previous Post Next Post